கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
சந்திரபிரகாஷ் திவேதி இயக்கத்தில் அக்ஷய்குமார், மனுஷி சில்லர், சஞ்சய் தத், சோனு சூட் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் 'சாம்ராட் பிருத்விராஜ்'. சுமார் 200 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட சரித்திரப் படம் எதிர்பாராத பெரும் தோல்வியைத் தழுவியுள்ளது.
கடந்த ஐந்து நாட்களில் இப்படம் சுமார் 50 கோடி வசூலை மட்டுமே பெற்றுள்ளது. நேற்று வட இந்தியாவிலேயே பல தியேட்டர்களில் மக்கள் வராத காரணத்தால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அக்ஷய்குமார் நடித்து வெளிவந்த ஒரு படத்திற்கு ஒரு வாரத்திற்குள்ளாக இப்படி காட்சிகள் ரத்து செய்யப்படுவது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிருந்து பாலிவுட்டிற்குச் சென்று வெற்றி பெற்ற 'புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' ஆகிய படங்களின் தாக்கம் அங்கு அதிகமாக இருக்கிறது. இந்தப் படங்களைப் போல நேரடி ஹிந்திப் படங்களையும் அங்குள்ள ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என பாலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். தென்னிந்தியப் படங்களைப் போல ஆக்ஷன் காட்சிகள் பிரம்மாண்டமாகவும், அசத்தலாகவும் இருக்க வேண்டும் என பாலிவுட் ரசிகர்கள் விரும்புகிறார்கள் என மேலும் தெரிவிக்கிறார்கள். பாலிவுட் இயக்குனர்கள் தங்கள் ஸ்டைலை மாற்றிக் கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது என விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.