35 ஆண்டுகளுக்குப் பிறகு ரீரிலீசாகும் சிரஞ்சீவி, ஸ்ரீதேவி படம் | 'ஜனநாயகன்' விஜய் பெயர் 'தளபதி வெற்றி கொண்டான்' ? | அழவில்லை.... எனது கண்களில் பிரச்சனை : சமந்தா விளக்கம் | ரூ.100 கோடியைக் கடந்தது 'ரெட்ரோ' : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | அம்மா ஆனார் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா | கமல் 237வது படத்திற்கு யார் இசையமைப்பாளர்? | தனுஷூடன் மோதும் வைபவ் | தீபாவளி ரிலீஸ் படங்கள் என்னென்ன? | சிறுவன் ஸ்ரீதேஜ்-ஐ சந்தித்த அல்லு அர்ஜுன் அப்பா | அமெரிக்காவில் 100 சதவீத வரி : இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தகவல் |
பஞ்சாபில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாபோல உங்களையும் கொல்வோம் என்று சல்மான்கான் மற்றும் அவரது தந்தைக்கு நேரடி கொலை மிரட்டல் வந்திருப்பது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சல்மான் கானின் தந்தை சலீம் கான், மும்பை பாந்த்ரா பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பூங்காவில் தினமும் காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். அவருடன் அவரது பாதுகாவலரும் உடன் செல்வார். நடைபயிற்சி முடிந்து வழக்கமாக ஒரு இடத்தில் அவர் ஓய்வெடுப்பது வழக்கம்.
நேற்று அந்த இடத்தில் அழகான கடிதம் ஒன்று கிடந்தது. அதனை அவரது உதவியாளர் எடுத்து படித்தார். அந்த கடிதத்தில் 'சலீம் கான், சல்மான் கான்... விரைவில் சித்து மூஸ்வாலா போல்...' என்று எழுதப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் சலீம் கானிடம் அந்த கடித்தத்தை கொடுத்தார். அவர் மும்பை போலீசிடம் அந்த கடிதத்தை ஒப்படைத்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். சல்மான்கானுக்கும், அவரது தந்தைக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பாந்த்ராவில் சல்மான்கான் குடியிருக்கும் கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்புகளை சுற்றியும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.