35 ஆண்டுகளுக்குப் பிறகு ரீரிலீசாகும் சிரஞ்சீவி, ஸ்ரீதேவி படம் | 'ஜனநாயகன்' விஜய் பெயர் 'தளபதி வெற்றி கொண்டான்' ? | அழவில்லை.... எனது கண்களில் பிரச்சனை : சமந்தா விளக்கம் | ரூ.100 கோடியைக் கடந்தது 'ரெட்ரோ' : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | அம்மா ஆனார் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா | கமல் 237வது படத்திற்கு யார் இசையமைப்பாளர்? | தனுஷூடன் மோதும் வைபவ் | தீபாவளி ரிலீஸ் படங்கள் என்னென்ன? | சிறுவன் ஸ்ரீதேஜ்-ஐ சந்தித்த அல்லு அர்ஜுன் அப்பா | அமெரிக்காவில் 100 சதவீத வரி : இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தகவல் |
பாலிவுட் நடிகர் ஷாருக் கான், பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிர முன்னாள் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிசுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுஉள்ளார். பிரபல பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், கார்த்திக் ஆர்யன், நடிகை கத்ரீனா கைப் உள்ளிட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இவர்கள் அனைவரும் தங்களை தனிமைப் படுத்திக் கொண்டனர். தங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்படியும், அவர்கள் தெரிவித்துஉள்ளனர்.