பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
பரபரப்புக்கு பெயர்போன பாலிவுட் முன்னணி நாயகி கங்கனா ரணவத் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் தக்கார்ட்.. வரும் மே 20ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. ரஷ்ணீஸ் கய் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் ராம்பால் வில்லனாக நடிக்க, இன்னொரு முக்கிய வேடத்தில் திவ்யா தத்தா நடித்துள்ளார். இந்த இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.
வழக்கமாக இது போன்ற படங்களுக்கு தானாகவே வந்து வாழ்த்துக்களை கூறும் விதமாக அந்தப்படத்தின் பாடல்கள், டீஸர், டிரைலர், பட போஸ்டர்களை எப்போதும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் பகிர்ந்து கொள்வது வழக்கம். அந்தவகையில் தக்கார்ட் படத்தின் இந்த பாடலையும் அவரது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டதுடன் 'அவள் தீயாக இருக்கிறாள்' என கங்கனாவை பற்றி பாராட்டியும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் சில மணிநேரங்களில் அந்த பதிவை அமிதாப்பச்சன் நீக்கிவிட்டார்.
தற்போது அது குறித்து விளக்கம் அளித்துள்ள அமிதாப், “சமீபகாலமாக இந்திய அரசாங்கம் மற்றும் செய்தித்துறை சமூக வலைதளங்களுக்கான விதிகளை ரொம்பவே கடுமையாக்கி வருகின்றன. அந்தவகையில் இதுபோன்ற படங்களின் பாடல்கள், டிரைலர் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டபோது, ஒரு சிலர் நாங்கள் நான்தான் இதன் விளம்பரதாரர்கள், பங்குதாரர்கள், புரமோட்டர்கள் என ஏதோ ஒன்றை கூறி நோட்டீஸ் அனுப்புவது தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் இந்த பாடலுக்கும் அப்படி ஒரு நோட்டீஸ் எனக்கு அனுப்பப்பட்டது. அதனாலதான் இந்த பாடலை எனது பக்கத்தில் இருந்து நீக்கினேன்” என்று கூறியுள்ள அமிதாப் பச்சன் இதன் பின்னணியில் யார் செயல்படுகிறார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்றும் கூறியுள்ளார்.