‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

டாக்டர் சந்திரபிரகாஷ் திவேதி இயக்கத்தில் அக்ஷய்குமார், சஞ்சய் தத், சோனு சூட், மனுஷி சில்லர் மற்றும் பலர் நடித்துள்ள 'பிருத்விராஜ்' டிரைலர் நேற்று யு டியூபில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.
டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 44 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்பு '83' படம் பெற்ற 43 மில்லியன் சாதனையை 'பிருத்விராஜ்' டிரைலர் முறியடித்துள்ளது.
தெலுங்கு டிரைலருக்கு இதுவரையில் 5 மில்லியன் பார்வைகளும், தமிழ் டிரைலருக்கு 3 மில்லியன் பார்வைகளும் கிடைத்துள்ளன. ஜுன் 3ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. ஹிந்தியிலிருந்து தமிழ், தெலுங்கிலும் இப்படம் டப்பிங் ஆகி வெளியாகிறது.
தென்னிந்தியாவிலிருந்து சமீப காலங்களில் ஹிந்திக்கு டப்பிங் ஆகும் படங்கள் நல்ல வசூலைக் குவிக்கின்றன. இந்நிலையில் தமிழ், தெலுங்கில் மட்டும் டப்பிங் ஆகும் இப்படம் ஓரளவிற்கு நல்ல வசூலைக் குவிக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. அதற்கு டிரைலருக்குக் கிடைத்துள்ள வரவேற்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.




