நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
2018ல் அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு வாடகை தாய் மூலம் ஒரு குழந்தை பிறந்தது. இந்த குழந்தை 28 வாரங்கள் கலிபோர்னியாவில் உள்ள மருத்துமனையில் மருத்துவர்களின் காண்காணிப்பில் இருந்து வந்தது. இப்படி பராமரிக்கப்பட்டு வந்த அந்த குழந்தையை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோன்ஸிடம் ஒப்படைக்கப்பட்டு, குழந்தையுடன் வீடு திரும்பி இருக்கிறார். இதனையடுத்து தனது குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக பிரியங்கா சோப்ரா வெளியிட்டுள்ளார் .
அதோடு, ‛‛கடந்த சில மாதங்களாக கடினமான நேரங்களில் நாங்கள் பயணித்தோம். 100 நாட்களுக்கு மேல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த எங்கள் குழந்தை இப்போது வீட்டிற்கு வந்தது மகிழ்ச்சி. எங்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி'' என உருக்கமாக தெரிவித்துள்ளார் பிரியங்கா.