ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
பாலிவுட் கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த் சர்ச்சை நாயகி. அடிக்கடி எதையாவது செய்தோ, பேசியோ பரபரப்பு கிளப்புவார். கடைசியாக தனது காதல் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறினார். அதன்பிறகு சில காலம் அமைதியாக இருந்தவர். இப்போது மீண்டும் அடுத்த சர்ச்சையை தொடங்கி விட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், பழங்குடியின பெண்களை போல ஆடை அணிந்து அவர்களை கிண்டல் செய்வது போல பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில கேந்த்ரிய சர்னா சமிதி என்ற அமைப்பின் தலைவர் ட்ரிக்கி பழங்குடியின மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக ராக்கி சாவந்த் மீது ராஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ராக்கி சாவந்த் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ட்ரிக்கி கூறியிருப்பதாவது: நடிகை ராக்கி சாவந்த், அரை நிர்வாண ஆடை அணிந்தபடி, பழங்குடியினப் பெண்களை இழிவுப்படுத்தியுள்ளார். ஆபாசமான கருத்துகளையும் தெரிவித்துள்ளார். இதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும், இல்லை என்றால் அவருக்கு எதிரான போராட்டம் தொடரும். என்கிறார்.