ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் | கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து | சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் தனுஷ்: அருண் விஜய் புகழாரம் | 7 வருடங்களுக்கு பிறகு கதை நாயகியாக நடிக்கும் ஆஸ்னா | மோகன்லாலுக்கு அக்., 4ல் விழா எடுத்து கவுரவிக்கும் கேரள அரசு | பிளாஷ்பேக்: சட்டசபையில் சர்ச்சையான 'தர்மபத்தினி' | மோகன்லாலின் ஜிம் பார்ட்னராக மாறிய திரிஷ்யம் பொண்ணு | பிளாஷ்பேக்: வில்லி வேடத்தில் கலக்கிய ஜெயலலிதாவின் சித்தி |
ஷாருக்கான் படம் வெளிவந்து 4 வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியா 2018ம் ஆண்டு ஜீரோ படம் வெளியானது. அதன்பிறகு ஓரிரு படங்களில் சிறப்பு தோற்றத்தில்தான் நடித்தார். ஜீரோ படமும் பெரிய தோல்வியை அடைந்தது.
இதனால் சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கினார். அதற்பிறகு சுதாரித்துக் கொண்டு தமிழ் இயக்குனர் அட்லியின் கதைக்கு ஓகே சொல்லி நடிக்க ஆரம்பித்தார். அதே போல் ராஜ்குமார் ஹிரானியுடன் ஒரு படமும் கமிட் ஆனார். இந்த நிலையில் போதை பொருள் வழக்கில் மகன் ஆர்யன் கைதாக அவனை காப்பாற்ற வேண்டியது இருந்தது. மேலும் இது ஷாருக்கானை மனதளவில் தளரச் செய்தது.
இதற்கிடையில் ஷாருக்கான் கடந்த இரண்டு வருடங்களாக நடித்து வந்த படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். ஜான் ஆபிரஹாம் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஷாருக்கான் படம் 5 வருட இடைவெளிக்கு பிறகு வெளிவருகிறது.