ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

தமிழில் யாருடா மகேஷ் படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்தீப் கிஷன். அதன்பிறகு மாநகரம், மாயவன், கசட தபற போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய்சேதுபதியுடன் மைக்கேல் படத்தில் நடித்து வருகிறார். இது தமிழ், தெலுங்கில் உருவாகிறது. தமிழில் அதிகம் நடிக்காவிட்டாலும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார்.
சந்தீப் கிஷனும், நடிகை சோனியா ரதேவும் தீவிரமாக காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சோனியா ரதே 'புரோக்கன் பட் பியூட்டிபுல்' என்கிற இந்தி வெப் தொடரிலும், 'டிகப்ளிஸ்ட்' என்கிற ஆங்கில வெப் தொடரிலும் நடித்துள்ளார். இதுதவிர பாலிவுட் படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும், தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். அரியானா மாநிலத்தை சேர்ந்தவர். காதல் பற்றிய தகவல்களை இருவரும் இதுவரை மறுக்கவில்லை.