ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 170 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம், நெல்லை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் நடந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்பில் ரஜினி - அமிதாப்பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகிறது. இதற்காக நேற்று ரஜினி 170 வது படத்தின் படக்குழு மும்பை புறப்பட்டு சென்றது. அப்போது மும்பை விமான நிலையத்தில் ரஜினியை கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் சந்தித்துள்ளார். ரஜினியுடன் இணைந்து தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள இர்பான், இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினி மிகவும் எளிமையான மனிதராக உள்ளார். அவருடனான இந்த சந்திப்பு எனக்கு சில படிப்பினையை தந்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார். இவர் தமிழில் விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.