காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ரஜினிகாந்த். தற்போது ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புக்காக மும்பையில் உள்ளார். இதில் அமிதாப் பச்சன் நடிப்பதால் 33 ஆண்டுகள் கழித்து அவருடன் நடிக்கும் மகிழ்ச்சியை அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, மகிழ்ச்சியை பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் அரசியல் மற்றும் திரைத்துறையை சார்ந்த பல பிரபலங்கள் பங்கேற்றனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதா கிருஷ்ணன், முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, சகோதரி செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மூத்த நடிகை லதா, மீனா, நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
விருந்தினர்களை ரஜினியின் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.