லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நடிகை நயன்தாராவின் 75வது படத்தின் தலைப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், தமன் இசையமைப்பில், நயன்தாரா, ஜெய், சத்யராஜ்,கேஎஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சச்சு, ரேணுகா மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
தலைப்பு அறிவிப்பை ஒரு வீடியோவாக வெளியிட்டிருந்தார்கள். அந்த வீடியோவும் சர்ச்சைகுரிய விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு பிராமண குடும்பத்தைச் சேர்ந்த நயன்தாரா, 'பிசினஸ் லாஜிஸ்டிக்ஸ்' என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அந்த புத்தகத்திற்குள் 'நான் வெஜ்' உணவுகளைப் பற்றிய புத்தகத்தை ஒளித்து வைத்து படிக்கிறார். குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் பூஜை, வழிபாடு என இருக்க நயன்தாரா இப்படி படிப்பது சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளது.
இந்நிலையில் இதே 'அன்னபூரணி' என்ற பெயரில் கடந்த வருடம் ஒரு படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். 'ஜெய் பீம்' படத்தில் நடித்த லிஜோமோள் ஜோஸ் கதாநாயகியாக நடிக்க லாஸ்லியா, ஹரிகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்க லயனல் ஜோஷ்வா இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைக்க 'அன்னபூரணி' என்று பெயர் வைத்து போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.
கடந்த வருடம் அக்டோபர் 24ம் தேதி இந்த 'அன்னபூரணி' படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளார்கள். அதே போல நயன்தாரா நடிக்கும் 'அன்னபூரணி' படத்தின் அறிமுக வீடியோவையும் அதே அக்டோபர் 24ம் தேதி வெளியிட்டுள்ளார்கள்.