இளையராஜா முன் அவரது பாடல்களுக்கு நடனமாடி வசீகரித்த ரஷ்ய கலைஞர்கள் | நடிகராக 50வது படம், தயாரிப்பாளராக மாறிய சிம்பு | சங்கராந்திகி வஸ்துனம் - ஒரே மொழியில் வெளியாகி 300 கோடி வசூல் | புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 3 வருடம் கழித்து வெளியிடப்பட்ட பாடல் | நடிகர் முகேஷ் மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்கு | சினிமாவில் 13 ஆண்டுகளை நிறைவு செய்த சிவகார்த்திகேயன் | போட்டியே இல்லை, இரண்டு வருட இடைவெளி, வசூலை அள்ளுமா 'விடாமுயற்சி' ? | புதிய படத்தை அறிவித்த மம்முட்டி | ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தமன் | 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படம் இயக்கும் ‛கும்பலாங்கி நைட்ஸ்' இயக்குனர் |
1983ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. இதை தழுவி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் 83 என்ற படம் உருவாகியுள்ளது. கபில்தேவ்வாக ரன்வீர் சிங், ஸ்ரீகாந்த்தாக ஜீவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கபீர்கான் இயக்கி உள்ளார்.
கொரோனா பிரச்னையால் தடைப்பட்டு நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ம் தேதி படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. ‛3டி'யிலும் இப்படம் வெளியாகிறது. மேலும் இப்படத்தின் டிரைலர் நவ.,30ல் வெளியாகிறது.