கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை | இது மட்டும் நடந்தால் பிசாசு 2 படத்தை நானே ரிலீஸ் செய்வேன் : ஆண்ட்ரியா |

பாலிவுட்டில் நட்சத்திரங்களின் காதல் திருமணங்கள் பல நடந்திருக்கின்றன. அடுத்த நட்சத்திர ஜோடியின் திருமணமாக ரன்பீர் கபூர், ஆலியா பட் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் ரன்பீர் கபூர், ஆலிய பட். ரன்பீர் கபூர் நடிகர் ரிஷி கபூரின் மகன், ஆலியா பட் இயக்குனர் மகேஷ் பட்டின் மகள். இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இவர்களது திருமணம் எப்போது நடக்கும் என்ற கேள்வி நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. வரும் டிசம்பர் மாதம் இவர்களது திருமணம் நடைபெறலாம் என பாலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தில் 'டெஸ்டினேஷன் திருமணமாக' தங்களது திருமணத்தை நடத்த உள்ளார்களாம். இருவரும் தற்போது 'பிரம்மாஸ்த்ரா' என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். அதை முடித்துவிட்டு மற்ற படங்களை 2022க்குத் தள்ளி வைத்துவிட்டார்களாம்.