இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

'பாராட்டு'க்கு மற்றொரு வார்த்தை கொண்ட ஓடிடி நிறுவனம் ஒன்று விரைவில் மூடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்குத் திரையுலகத்தின் பெரிய குடும்பத்திற்குச் சொந்தமானது அந்த நிறுவனம். தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் அவர்களது சேவையை ஓரிரு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தார்கள். சில படங்களை வாங்கி ஓடிடியில் வெளியிட்டார்கள். வெப் தொடர்களையும் தயாரித்தார்கள். ஆனால், உலக அளவில் பிரபலமாக உள்ள ஓடிடி தளங்களுடன் அந்த 'பாராட்டு' ஓடிடி தளத்தால் போட்டி போட முடியவில்லையாம். அதனால், தமிழில் அவர்களது சேவையை நிறுத்திவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்களாம்.
மற்ற பிரபலமான ஓடிடி நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கினால் அனைத்து மொழி சேவைகளையும் வழங்கி வருகின்றன. ஆனால், அந்த 'பாராட்டு' ஓடிடி தளம் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக கட்டணம் வசூலிப்பதே அதன் தோல்விக்குக் காரணம் என ஓடிடி வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். சரியான பணியார்களை வேலைக்கு எடுக்கவில்லை என்றாலும் தோல்வியைத் தழுவ நேரிடும் என்றும் மேலும் சொல்கிறார்கள். குறுகிய காலத்தில் ஒரு ஓடிடி நிறுவனம் ஆரம்பமாகி மூடப்படுவது தமிழ்த் திரையுலகினருக்கு இழப்புதான்.