சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

விஜய் டிவி காமெடி நடிகர் சரத் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அதிகம் பாப்புலர் ஆன சரத், தொடர்ந்து விஜய் டிவியிலேயே பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருவதுடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு புகழ் பெற்றார். தற்போது அவர் தன் மனைவியுடன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், புதிய கார் ஒன்றை வாங்கியுள்ள அந்த தம்பதியினர் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். தான் வாங்கிய கார் முன்பு கெத்தாக ஜோடியாக நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் மனைவியின் அன்பான பரிசு என குறிப்பிட்டு சரத் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து சரத் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
அதேசமயம் குக் வித் கோமாளி புகழ் சமீபத்தில் தான் கார் வாங்கியிருந்தார். தற்போது சரத் - கிருத்திகாவும் கார் வாங்கியதை பார்க்கும் நெட்டிசன்கள் புகழுக்கே போட்டியான செல்லமாக அவரை கலாயத்து வருகின்றனர்.