‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

சின்னத்திரையில் மின்னும் பல நட்சத்திரங்களில் தனி அழகுடன் மின்னி கொண்டிருப்பவர் நக்ஷத்திரா நாகேஷ். தொகுப்பாளினி, கதாநாயகி என சின்னத்திரையின் அனைத்து பரிணாமங்களிலும் திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்று வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நக்ஷத்திரா கலக்கான பல போட்டோஷூட்களையும் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது தனது அழகான புகைப்படங்களுக்கு காரணமான போட்டோகிராபாரை தனது ரசிகர்களுக்கு அறிமுக செய்து வைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய புகைப்படங்களை நக்ஷத்திரா பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் தனது போட்டோகிராபரை 'கேமரா செந்தில் மேஜிக்னா சும்மாவா?' என புகழ்ந்து பதிவிட்டுள்ளார். நக்ஷத்திராவின் இந்த போட்டோக்களை ஏராளமான ரசிகர்கள் லைக்ஸ் செய்து வருதுடன் அழகே என வர்ணித்து கமெண்ட்டும் பதிவிட்டு வருகின்றனர்.