ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
விஜய் டிவி சீரியலான பாரதி கண்ணம்மா தொடரில் அகிலன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் அகிலன் புஷ்பராஜ் நடித்து வந்தார். சீரியலின் இரண்டாம் கதாநாயகனான அந்த கதாபாத்திலிருந்து அகிலன் தற்போது விலகியுள்ளார். அவர் விலகியதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இந்நிலையில் அகிலன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாரதி கண்ணம்மா தொடரிலிருந்து விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
அகிலன் புஷ்பராஜ் சின்னத்திரையில் அறிமுகமாயிருந்தாலும் அவரது ரசிகர்கள் அவரை திரைப்பட நடிகராகவே கற்பனை செய்து வந்தனர். அந்த கற்பனை உண்மையாகி சமீபத்தில் அவர் திரைத்துறையில் அறிமுகமானார். நடிகர் பிரபுதேவாவுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வந்த அகிலன், ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் தற்போது அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வருகின்றன. எனவே, பாரதி கண்ணம்மா சீரியலுக்கான சரியான கால்ஷீட்டை கொடுக்க இயலவில்லை. இதன் காரணமாகவே அவர் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சுகேஷ் என்ற புது நடிகர் அகிலன் கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.
பாரதி கண்ணம்மா தொடங்கி 3 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தனது கேரியரின் அடுத்தபடியை எட்டியிருக்கும் அகிலன், தொடரிலிருந்து தற்போது வெளியேறியுள்ளார். அகிலன் தற்போது பீட்சா 3, விஷாலுடன் இணைந்து ஒரு படம் மற்றும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் இரண்டு படங்கள் என நான்கு படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இதை அறிந்த அவரது ரசிகர்கள் அகிலனுக்கு தங்களது பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர்.