சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

விஜய் டி.வியில் பலரையும் கவர்ந்து வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. உலகம் முழுக்க டிவியில் சமையல் நிகழ்ச்சி இருந்தாலும், அதையும் காமெடி மற்றும் 100 சதவிகித எண்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியாக்கி அசத்தி வருகிறது சேனல்.
மற்ற கேம் ஷோக்களை போன்று இதிலும் எலிமினினேஷன்களும், டாஸ்களும் இருப்பது நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்குகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் சினிமாவில் நடிக்க தேர்வாகிற அளவிற்கு நிகழ்ச்சி பிரபலமாகி இருக்கிறது.
குக் வித் கோமாளி 2ம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தா, ரித்திகா ஆகியோர் எலிமினேட் ஆகிவிட்டனர். தற்போது அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, ஷகீலா, பவித்ரா லக்ஷ்மி ஆகியோர் போட்டியாளர்களாக இருந்தனர். இந்நிலையில் இதுவரை நிகழ்ச்சியில் கலக்கி வந்த பவித்ரா எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் நிகழ்சியில் பேசியதாவது: குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்ததால் மன அழுத்தத்தில் இருந்து மீண்டு இருக்கிறேன். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பலரும் தங்களது மன அழுத்தத்தை குறைப்பதாக கூறுகின்றனர். ஆனால் நான் இதில் பங்கேற்றதால் மன அழுத்தத்தை குறைத்திருக்கிறேன். என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி. என்றார் பவித்ரா.
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளத்தில் அவர் எழுதியிருப்பதாவது:. இது மிகவும் அற்புதமான பயணம். எனக்கு அளவில்லாத அன்பையும் ஆதரவை வழங்கிய என் அன்புக்குரிய மக்களே உங்கள் அனைவருக்கும் நன்றி. குக் வித் கோமாளி டீமில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் என் இதயபூர்வமான நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.
முதல் முறையாக, உல்லாசம் என்ற மலையாள படத்தில் ஷானி நிகமிற்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்து வருகிறார் பவித்ரா. தமிழ் படங்கள் சிலவற்றிலும் நடிக்க பேசி வருகின்றனர்.




