'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
கொரோனா காலத்திற்கு பிறகு நெடுந்தொடர்களின் படப்பிடிப்பு கணிசமாக குறைந்துள்ளது. அதோடு ஓடிடி தளங்களில் புதிய படங்கள் வெளியிடப்படுவதால் வீட்டில் இருக்கும் பெண்கள் அதன் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதனால் நெடுந்தொடர்களின் பார்வையாளர்கள் குறைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் எல்லா சேனல்களும் தாங்கள் ஒளிபரப்பிய முன்னணி நெடுந்தொடர்களை மறு ஒளிபரப்பு செய்து தங்களது புட்டேஜ் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. கடந்த 1ந் தேதி முதல் வாணி போஜன், கிருஷ்ணா நடித்த தெய்வமகள் மறு ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது.
அதேபோல திலீப்ராயன், விஜயலட்சுமி நடித்த நாயகி தொடர் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இரண்டும் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
இதேபோன்று ஜெயா டிவியில் ஒளிபரப்பான கோபுரங்கள் சாய்வதில்லை தொடர் கடந்த 1ம் தேதி முதல் மறு ஒளிப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது. இதில் ஐஷ்வர் ரகுநாதன், அன்சு ஷெட்டி நடித்திருக்கிறார்கள்.