'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

சின்னத்திரையில் இருந்து ஏராளமானோர் சினிமாவுக்கு சென்ற கொண்டிருக்கிறார்கள். காமெடி நடிகர்களாக, ஹீரோக்களாக, குணசித்ர நடிகர்களாக படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் அடுத்து ஹீரோவாகி இருக்கிறார் தொகுப்பாளர் பப்பு.
விஜய் டிவியில் தொகுப்பாளராக இருக்கும் பப்பு, ரிவ்யூ ராஜா, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிளில் பங்கேற்றிருக்கிறார். சின்னத்தம்பி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ஏற்கெனவே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் பப்பு இப்போது ஹீரோவாகி இருக்கிறார்.
பப்பு நடிக்கும் படத்தை வணக்கம் தமிழா மூவிஸ் சார்பில் சாதிக் தயாரித்து இயக்குகிறார். பூஜையுடன் இதன் படப்பிடிப்பு தொடங்கியது டார்க் பேண்டஸி ஜானரில் இந்த படம் உருவாகிறது. படத்திற்கு கதை திரைக்கதை வசனம் ஜீவி படப் புகழ் பாபு தமிழ் எழுதி இருக்கிறார். பப்புவுடன் கன்னிமாடம் ஸ்ரீராம் கார்த்திக் மற்றும் அஜய் வாண்டையார் ஆகியோரும் நடிக்கிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.




