2025ல் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை யார் ? | மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா! | ரெட்ரோ படம் சூர்யாவுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது! - கார்த்திக் சுப்பராஜ் | 500 கோடி நிகர வசூலைக் கடந்த 'ச்சாவா' | சினிமா துறையில் பாலின பாகுபாடு: மாதுரி தீக்சித் கவலை | பிரபு, வெற்றி இணைந்து நடித்து ரிலீசுக்கு தயாரான 'ராஜபுத்திரன்' | 'ஹிட் 3' பார்க்காதீர்கள்: நானி சொன்ன காரணம் தெரியுமா? | ''ரசிகர்கள் மாறிவிட்டாங்க...'': ஷில்பா ஷெட்டி | 'அவள்' பட இயக்குனருடன் இணைகிறாரா ரவி மோகன்? | பராசக்தி இந்த காலகட்டத்திற்கு பொருந்தும்! - ஆகாஷ் பாஸ்கரன் |
சின்னத்திரையில் பல வருடங்களாக பயணித்து வருபவர் ஜீவிதா. திறமையான நடிகை என பெயரெடுத்த இவர் இதுவரை 70 திரைப்படங்களில் நடித்துள்ளார். பல முன்னணி சேனல்களின் சீரியல்களிலும் வில்லி மற்றும் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார். திரைத்துறையில் தனக்கு சரியான வாய்ப்பும், தனது திறமைக்கான அங்கீகாரமும் கிடைக்கவில்லை என மனம் கொந்தளிக்கும் இவர், அவ்வப்போது அளிக்கும் பேட்டிகளில் சினிமாவில் தனக்கு நடந்த மோசமான நிகழ்வுகள் குறித்து பேசியிருக்கிறார்.
முன்னதாக சினிமாவில் தன்னிடம் அட்ஜெஸ்மெண்ட் கேட்பவர்கள் தமிழர்கள் தான் என குண்டை தூக்கிப் போட்ட ஜீவிதா, தற்போது 'ரெக்க' படத்தின் இயக்குநர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறியிருக்கிறார். அவரது பேட்டியில், 'சினிமாவில் என்னை ஏன் வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்றே தெரியவில்லை. சிலர் கடைசி வரையில் நீங்கள் படத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்லிக்கொண்டேயிருப்பார்கள். ஆனால், அந்த படமே கடைசியில் வெளியாகி விடும்.
அப்படித்தான் ரெக்க படத்தின் இயக்குநர் ரத்தினவேல் எனக்கு தெரிந்தவர் தான். அந்த படத்தில் கண்ணம்மா கண்ணம்மா பாடலை என்னை நினைவில் வைத்து தான் எழுதியதாக சொன்னார். எனது கண்கள் பிடிக்கும் என்று சொன்னார். என்னை பார்த்தால் அவரது அத்தை ஞாபகத்துக்கு வருவதாக சொன்னார். என்ன நடந்தது என்று தெரியவில்லை. அந்த கேரக்டரில் வேறு நடிகையை நடிக்க வைத்துவிட்டார். இப்படி எனக்கு பல ஏமாற்றங்கள் சினிமாவில் நடந்திருக்கிறது' என்று அந்த பேட்டியில் ஜீவிதா கூறியிருக்கிறார்.