எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
தென்னிந்திய மொழிகளில் தமிழ் மற்றும் கன்னட சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நேஹா கவுடா. தமிழில் இவர் நடித்த ‛கல்யாண பரிசு, பாவம் கணேசன்' ஆகிய இரண்டு தொடர்களுமே சூப்பர் ஹிட். கடந்த 2018ம் ஆண்டு காதலர் சந்தன் கவுடாவை திருமணம் முடித்த இவருக்கு 6 வருடங்களுக்கு பிறகு அண்மையில் தான் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. குடும்ப பொறுப்புகளின் காரணமாக நடிப்பிற்கு பிரேக் விட்டுள்ள நேஹா கவுடா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சிறுவயதில் தனக்கு நிகழ்ந்த பாலியல் ரீதியான தொல்லை குறித்து மனம் திறந்துள்ளார்.
அவரது பேட்டியில், ‛‛நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் வீட்டில் தூங்கி எழுந்த போது அம்மா வீட்டில் இல்லாததால் அவரை தேடி வெளியே வந்தேன். அப்போது பக்கத்து தெருவில் இருந்த ஒருவன் என் அப்பாவை நன்றாக தெரியும் என்று கூறி ஒரு வாட்ச் கடைக்குள் அழைத்து சென்று கதவை சாத்தினான். அங்கே என்னிடம் மிகவும் தப்பாக நடந்து கொண்டான். நான் பயத்தில் அழ ஆரம்பித்தேன். என்னிடம் கத்தியை காட்டி அழாதே என்று மிரட்டி, அடித்தான். ஒருவழியாக அவனிடம் இருந்து தப்பித்து வந்துவிட்டேன். அதன்பிறகு சில வருடங்கள் கழித்து ‛குட் டச் பேட் டச்' குறித்து ஆசிரியர் சொல்லி கொடுத்த போது தான், அன்று எனக்கு என்ன நிகழ்ந்தது என்பது எனக்கு புரிந்தது. அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் பயமாக இருக்கிறது'' என்று கூறியிருக்கிறார்.