ஜில்லுனு ஒரு காதலை ஞாபகப்படுத்தும் 'சூர்யா 46' பட போஸ்டர் | மீண்டும் நடிக்க வருகிறார் அப்பாஸ் | கேரளாவில் படமான சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் | தனுஷ் பட கிளைமாக்சை மாற்ற இயக்குனர் எதிர்ப்பு | இளையராஜா பெயரை நீக்கிய வனிதா | மீண்டும் கதை நாயகியான சுவாசிகா | மாரீசனுக்காக வடிவேலு ‛வெயிட்டிங்' | தமிழில் முதல் ஏஐ தொழில்நுட்ப இசை ஆல்பம் | ‛ஜென்ம நட்சத்திரம்' நிறைய சொல்லிக் கொடுத்தது : தமன் | பிளாஷ்பேக்: இதய கோவிலை இயக்கியதற்காக வருந்திய மணிரத்னம் |
பாலாஜி முருகதாஸ் நெகிழ்ச்சி பிக்பாஸ் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலர் நடிப்பில் அண்மையில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‛ஃபயர்'. இதில், பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலெட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விழிப்புணர்வு படம் என்கிற பெயரில் அதிகமான ஆபாச குப்பைகளுடன் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இளம் ரசிகர்களின் ஆதரவு வெகுவாக கிடைத்து வருவதால் திரையரங்குகளில் ஸ்கிரீன்களும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்த படத்தில் பாலாஜி முருகதாஸின் நடிப்பை பாராட்டி அவரது ரசிகர்கள் சிலர் அவருக்கு தங்கச்சங்கிலியை பரிசாக அளித்திருக்கிறார்களாம். இதுகுறித்து பாலாஜி முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராமில், 'என் நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்' என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதை பாசிட்டிவாகவும் நெகட்டிவாகவும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.