தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

கேரளாவை சேர்ந்த நடிகையான வித்யா மோகன் தென்னிந்திய மொழிகளில் சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், அதையெல்லாம் தாண்டி அவருக்கு பெயர் புகழ் கிடைத்தது சீரியல்களில் தான். தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சீரியல்கள் நடித்துள்ள இவர், தமிழில் 'வள்ளி, அபியும் நானும்' என இரண்டு ஹிட் தொடர்களை கொடுத்துள்ளார்.
அதன்பின் தமிழ் சின்னத்திரை பக்கம் கரை ஒதுங்காத வித்யா மோகன் மலையாளத்தில் சீரியல்கள் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தற்போது கால்பந்து போட்டியில் களமிறங்கி விளையாடியிருக்கிறார். அதன் புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.




