வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அனைத்து மொழிகளிலும் ஹிட் அடிக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். அந்நிகழ்ச்சி மீது பல விமர்சனங்கள் எழுந்தாலும் டிஆர்பிக்கு குறைவில்லாமல் மக்களின் ஆதரவும் கிடைத்து வருகிறது. தற்போது தமிழில் பிக்பாஸ் சீசன் 8 முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் அதேவேளையில் ஹிந்தியிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
மற்ற சீசன்களை போல் இல்லாமல் இந்த முறை ஹிந்தி பிக்பாஸ் பேசு பொருள் ஆகியிருக்க காரணம் அதில் கலந்து கொண்ட தமிழ் போட்டியாளர் தான். குக் வித் கோமாளி மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்த ஸ்ருதிகா ஹிந்தி பிக்பாஸில் என்ட்ரி கொடுத்து விளையாடி வருகிறார். பல்வேறு பிரச்னைகளை தாண்டி தற்போது இறுதிவரை முன்னேறியுள்ள ஸ்ருதிகா, ஹிந்தி பிக்பாஸ் டைட்டிலை வெல்வாரா என்பது ரசிகர்களின் ஆசையாக மாறியுள்ளது. இதற்கிடையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஸ்ருதிகாவுடன் இணைந்து சேட்டைகள் செய்த குரோஷியும், புகழும் ஸ்ருதிகாவிற்கு ஆதரவாக ஓட்டு போட சொல்லி ரசிகர்களிடம் கேட்டு வருகின்றனர்.