துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
'தெய்வமகள்' சீரியலில் மூர்த்தி என்கிற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் கணேஷ். அதன்பின் சில ஹிட் சீரியல்களில் நடித்திருந்த அவர் கடைசியாக 'பிரியமான தோழி' தொடரில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார். அதன்பின் சொல்லிக்கொள்ளும் வகையில் சின்னத்திரையில் தலைக்காட்டாத கணேஷ் தற்போது 'சிறகடிக்க ஆசை' தொடரில் நடிக்கவிருப்பதாகவும் அதேபோல் தெய்வமகள் சீரியலில் மூர்த்தியின் மனைவியாக நடித்த சுஹாசினியும் என்ட்ரி கொடுக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிய வருகிறது.
தெய்வமகள் சீரியலை இயக்கிய குமரன் தான் சிறகடிக்க ஆசை தொடரையும் இயக்குவதால் கணேஷ் - சுஹாசினி காம்போவை வைத்து புதிய டிராக்கை அவர் உருவாகியிருக்கலாம் எனவும் சின்னத்திரை வட்டாரங்களில் பேச்சு அடிப்பட்டு வருகிறது. அதை உறுதிப்படுத்துவது போல் சுஹாசினி, கணேஷ், பார்வதி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.