மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
நடிகர் மோகன்லாலை பொறுத்தவரை அவர் கிரிக்கெட்டை விட தீவிரமான கால்பந்து விளையாட்டு ரசிகர். அதனாலயே கேரள கால்பந்து பணியை அவர் அதிக அளவில் புரமோட் செய்வதை பார்க்க முடியும். குறிப்பாக உலக சாம்பியனான கால்பந்து வீரர் மெஸ்ஸியின் தீவிர ரசிகர் மோகன்லால். அப்படிப்பட்ட மெஸ்ஸியிடம் இருந்து அவரது கையெழுத்திட்ட ஒரு ஜெர்ஸி மோகன்லாலுக்கு பரிசாக தேடி வந்தபோது மோகன்லால் மனநிலை எப்படி இருந்திருக்கும்?. ஒரு நொடி இதயத்துடிப்பு நின்று துடிக்க ஆரம்பித்தது என்கிறார் மோகன்லால்.
இது குறித்து அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் மெஸ்ஸி அனுப்பிய டி-சர்ட் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளதுடன், “விவரிக்க முடியாத சில தருணங்கள் நமக்கு வாழ்க்கையில் கிடைக்கும். அப்படி ஒரு அனுபவம் இன்று எனக்கு கிடைத்தது. எனக்கு பரிசாக வந்த பார்சலை நான் பிரித்தபோது ஒரு நொடி என் இதயத் துடிப்பு நின்று துடித்தது அதில் கால்பந்து வீரர் மெஸ்ஸி அவர் கையெழுத்திட்டு இருந்த ஒரு ஜெர்ஸி இருந்தது. அது மட்டுமல்ல என் பெயரையும் அவர் தன் கைப்படவே எழுதி இருந்தது தான் என்னை பிரமிக்க வைத்தது.
நீண்ட காலமாக களத்தில் அவரது திறமைக்காக மட்டுமல்லாமல் அவரது மனிதநேயம் மற்றும் பெருமைகளுக்காக அவரை ஆராதிக்கும் என்னைப் போன்ற ஒருவருக்கு இது உண்மையிலேயே ஸ்பெஷலான பரிசு தான். இதை சாத்தியமாக்கியதற்கு என்னுடைய இரண்டு நண்பர்களாக டாக்டர் ராஜிவ் மாங்கோட்டில் மற்றும் ராஜேஷ் பிலிப் இருவருக்கும் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் மோகன்லால்.