ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' |
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் புதிய அவதாரம் எடுத்துள்ள வனிதா விஜயகுமார் பொறுப்பான பல விஷயங்களில் பயணித்து வருகிறார். சினிமா ஆக்டிங், பிசினஸ் என அனைத்திலும் மிகவும் பாசிட்டாவாக செயல்பட்டு வருகிறார். இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில் தனது மகள் சினிமா துறைக்கு வருவதை குறித்து பேசியுள்ள வனிதா, 'ஜோவிகாவை நான் நடிகையாக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. நானே சினிமாவை விட்டு வெளியேவந்தவள் தான். நான் எப்படி அவளை அதில் தள்ளுவேன். நடிக்க வேண்டும் என்பது அவளது விருப்பம். அதற்கு ஒரு தாயாக துணை நிற்பது என் கடமை என்று கூறியுள்ளார்'.
மேலும், திருமணம் குறித்த கேள்விக்கு பதில் கூறிய அவர், 'நான் எந்த ஒரு விஷயத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதில்லை. கமாவில் தான் வாழ்கை தொடர்கிறது. புள்ளி என்றால் அது முடிவு. எனவே, மீண்டும் நான் கல்யாணமே பண்ண மாட்டேன் என்று சொல்லமாட்டேன்' என கூறியுள்ளார்.