பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு |
பாக்கியலெட்சுமி சீரியலில் கோபி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் நடிகர் சதீஸ். பலவருடங்களாக திரையில் பயணித்து வரும் இவருக்கு பாக்கியலெட்சுமி தொடர் நல்லதொரு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடியும், பாக்கியலெட்சுமி சீரியல் குறித்து பல அப்டேட்டுகளையும் கொடுத்து வந்த இவர் ஒரு சில முறை சீரியலை விட்டு விலகுவதாகவும், பாக்கியலெட்சுமி தொடர் முடிவுக்கு வர உள்ளதாகவும் கூறி இருக்கிறார். அப்படியிருக்க, 5 வருடங்களுக்கு மேல் ஹிட்டாகி ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலெட்சுமி தொடர் சமீபகாலங்களில் சற்று சுமாராக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அண்மையில் சதீஷ் வெளியிட்ட வீடியோவில் சீரியலின் முடிவு ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இருக்கும் என்பது போல் கூறியிருந்தார். இதனையடுத்து சீரியலுக்கு எண்ட் கார்டு என செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது சதீஷ் மற்றொரு வீடியோவில் தான் சொன்னதை தவறாக மக்கள் புரிந்து கொண்டதாகவும் தற்போதைக்கு சீரியல் முடிய போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.
இதைபார்த்து கடுப்பான ரசிகர்கள் 'என்னங்க இவரு மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கார்' என கலாய்க்கின்றனர்.