2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிக்பாஸ் சீசன் 8 பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அண்மையில் வைல்டு கார்டு என்ட்ரியாக பிரபலங்கள் சிலர் உள்ளே நுழைந்துள்ளனர். இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற பிக்பாஸ் டாஸ்க்கில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த சோமான சம்பவத்தை கூற வேண்டும். அந்த டாஸ்க்கில் பேசிய சத்யா, '5 வயதிலேயே என் அப்பா அம்மா பிரிந்துவிட்டார்கள். பாட்டி வீட்டில் வளர்ந்தேன். பாட்டியால் பார்த்துக் கொள்ள முடியாததால் போர்டிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டார்கள். அங்கு நான் ஒரு பெண்ணை காதலித்தேன். கல்லூரி செல்லும் வரை எங்கள் காதல் தொடர்ந்தது. ஒரு நாள் என் காதலி என்னிடம் சொல்லிவிட்டு தான் ஒரு இடத்திற்கு சென்றாள். ஆனால், அங்கு சிலர் அவரை பாலியல் வன்புணர்வு செய்து அவளை கொன்று ரயில்வே ட்ராக்கில் தூக்கி போட்டு சென்றுவிட்டார்கள். அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 5 முறை தற்கொலை முயற்சி செய்தேன். அதன் பின் சினிமா தான் எனக்குள் மாற்றத்தை கொண்டு வந்தது. என் பெற்றோர் காதலி என அனைவருமே என்னை விட்டு சென்றுவிட்டனர். அதன்பின் எனக்கு இன்னொரு காதல் வந்தது. அது தான் என் மனைவி ரம்யா' என உருக்கமாக பேசியிருந்தார். சத்யாவின் இந்த கதையானது சக போட்டியாளர்கள் ரசிகர்கள் என அனைவரையுமே கலங்க செய்துள்ளது.