ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
மாடல் அழகியாக இருந்த அபிராமி வெங்கடாசலம் 2016ல் 'மிஸ்.தமிழ் நாடு' பட்டம் பெற்ற பிறகு கவனிக்கப்பட்டார். சின்னத்திரை தொடர்களில் நடிகையாகவும், தொகுப்பாளராகவும் இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மேலும் பிரபலமாகி சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். நோட்டா, களவு படங்களில் சிறு கேரக்டரில் நடித்த அபிராமி அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
அதன் பிறகு ராக்கெட்டரி, வான் மூன்று படங்களில் நடித்தார். அவர் நடித்து முடித்துள்ள துருவ நட்சத்திரம், நெருஞ்சி உள்ளிட்ட சில படங்கள் வெளிவரவில்லை. புதிய வாய்ப்புகளும் இல்லை. இதனால் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பி இருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'நினைத்தேன் வந்தாய்' தொடரின் மூலம் ரீ என்ட்ரியாகி இருக்கிறார். இந்தத் தொடரில் 'சுடர்' கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த ஜாஸ்மின் ரத் விலக, அவருக்கு பதிலாக அபிராமி நடிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது : தொலைக்காட்சியில் தொகுப்பாளராகத்தான் எனது கலை பயணத்தை தொடங்கினேன். கொஞ்சம் இடைவெளி விழுந்த மாதிரி இருந்தது. இதனால் இன்னும் சில விஷயங்களை முயற்சி பண்ணி பார்க்கலாம் என்று முடிவு செய்து மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறேன். இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்தது ஆச்சர்யமானது.
ரீ பிளேஸ் கேரக்டரில் நடிப்பது கொஞ்சம் சவாலானது. மக்கள் ஒரு கேரக்டரில் ஒரு முகத்தை பார்த்து பழகி இருப்பார்கள். அதே கேரக்டரில் இன்னொரு முகத்தை ஏற்றுக் கொள்வதற்கு கொஞ்சம் கால அவகாசம் எடுக்கும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்பதும் எனக்கு தெரியும். இந்தத் தொடரில் நான்கு குழந்தைகளை அக்கறையாக கவனித்துக் கொள்கிற அம்மாவாக நடிக்கிறேன். பெண்கள் எல்லாருக்குள்ளேயும் தாயன்பு இயல்பாகவே இருக்கும். அதனால் நடிப்பதற்கும் எளிதாக இருக்கிறது. என்கிறார்.