குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வீஜே மணிமேகலை அண்மையில் விலகினார். சுயமரியாதை இல்லாத இடத்தில் இருக்க விரும்பவில்லை என கூறிய அவர், பிரியங்கா தன் ஆங்கரிங் பணிகளில் தலையிடுவதை சுட்டிக்காட்டியிருந்தார். இதனையடுத்து மணிமேகலையில் விலகலுக்கு குக் வித் கோமாளி பிரபலங்கள் உள்பட பல பிரபலங்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் கோமாளியாக வரும் குரோஷி, 'நல்ல முடிவு, வாழ்த்துகள் மணிமேகலை' என்றும், பரீனா ஆசாத், 'உங்களுக்கு நல்ல தைரியம். எதையும் விட தைரியம் மிக முக்கியம். நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்' என்றும், முன்னாள் கோமாளியான மோனிஷா, 'கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்' என்றும், அனிதா சம்பத், 'நீங்கள் எடுத்தது நல்ல முடிவு ஆல் தி பெஸ்ட்' என்றும் வரிசையாக ஆதரவளித்துள்ளனர். மேலும், பாடகி சுசித்ரா அவரது பதிவில், 'மணிமேகலையின் துணிச்சலை நான் பாராட்டுகிறேன். நான் அவருக்கு தான் ஆதரவு தருவேன்' என பதிவிட்டுள்ளார்.