மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? |
சின்னத்திரை பிரபலமான அபிராமி தொலைக்காட்சி தொகுப்பாளராக மீடியாவில் அறிமுகமானார். சில படங்களில் நடித்துள்ள அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டு ரசிகர்களிடம் அதிகம் ரீச்சானார். அதன்பிறகு சினிமாவில் முழுநேர நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அபிராமிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஜீ தமிழில் ஒளிபரப்பான வீரா என்கிற தொடரில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஆரம்பித்த அபிராமி தற்போது முழுநேர சீரியல் நடிகையாக மாறியிருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மற்றொரு தொடரான நினைத்தேன் வந்தாய் தொடரில் சுடர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜாஸ்மின் ராத் தற்போது விலகிவிட்டார். அவருக்கு பதிலாக சுடர் கதாபாத்திரத்தில் இனி அபிராமி தான் நடிக்கிறார்.