'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
சின்னத்திரை நடிகையான ஹாசினி பல சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் இளையராஜாவின் உறவினர் ஆவார். இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராமில் கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், 'நான் என்னை பற்றிய வதந்திகளுக்கு பதில் கொடுக்க விரும்புகிறேன். நான் என்னை தொடர்புகொள்ள முடியாத நாட்டிலோ, ஊரிலோ செட்டில் ஆகிவிடவில்லை. சென்னையில் தான் இருக்கிறேன். தொடர்ந்து நடிப்பு, கான்செட், வீஜே என செய்து கொண்டு தான் இருக்கிறேன். கார்ப்பரேட் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறேன். ஆனால், சிலர் நான் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டதாக செய்தி பரப்பி வருகிறார்கள். எனவே, என்னை பற்றிய வதந்திகள் எதுவும் கேள்விப்பட்டால் என்னை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளுங்கள்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.