சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
கோவாவில் தற்போது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக 'சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் பல மொழிகளை சேர்ந்த நடிகைகள், இயக்குனர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் சுஹாசினி பேசியதாவது:
சினிமா துறை மற்ற துறைகளைவிட வித்தியாசமானது. மற்ற துறைகளில் நீங்கள் வேலை முடிந்ததும் வீட்டுக்கு சென்றுவிடலாம். ஆனால் சினிமாவில் அப்படி போக முடியாது. 200 அல்லது 300 பேர் படப்பிடிப்புக்காக ஒரு இடத்துக்கு செல்லும்போது அங்கேயே ஒரு குடும்பமாக தங்கி இருக்க வேண்டும். விதிகளை கடைபிடிக்காமல் இருக்கும் பட்சத்தில் அங்கே எல்லை மீறல் நிகழ்வதற்கு அதிக சாத்தியங்கள் உண்டு. 200 பேர் கொண்ட ஒரு படக்குழுவில், குடும்பத்தை விட்டு தனியாக இருப்பவர்கள் மீது சிலர் அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வார்கள். அதுவும் இல்லாமல், தற்போது புதிதாக வரும் சினிமாவுக்குள் நுழையும் இளைஞர்களுக்கு போதுமான அனுபவமும் இருப்பதில்லை . இதைத்தான் சிலர் தவறாக பயன்படுத்தி கொள்ள நினைக்கிறார்கள்.
மற்ற சினிமா துறைகளைவிட, மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு. காரணம், மலையாள படங்கள் பெரும்பாலும் வெவ்வேறு லோகேஷன்களில் எடுக்கப்படுகின்றன. இதனால் நடிகைகள் மாதக்கணக்கில் தங்கள் வீட்டை விட்டு பிரிந்திருக்க நேரிடுகிறது. இதனால் அவர்களிடம் தவறாக நடந்துகொள்கிறார்கள். மலையாள திரையுலகில் இதுதான் நடக்கிறது.
தமிழ் சினிமாவில் படப்பிடிப்பு முடிந்தால் நான் சென்னைக்கு சென்றுவிடுவேன், தெலுங்கில் ஷூட்டிங் முடிந்தால் ஐதராபாத் சென்றுவிடுவேன். கர்நாடகாவில் என்றால் நான் பெங்களூரு சென்றுவிடுவேன். ஆனால் மலையாள சினிமாவில் ஷூட்டிங் முடிந்தால், உங்களால் வீட்டுக்கு திரும்பிச் செல்ல முடியாது. காரணம், அங்கே அப்படி ஒரு இடம் இல்லாததால், உங்களால் வெளியில் எங்கேயுமே செல்ல முடியாது. அதனால்தான், படப்பிடிப்பு தளங்களில் எல்லைகள் மீறப்படுகின்றன" என்றார் சுஹாசினி.