இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வீஜே தீபிகா. சமீபகாலங்களில் ஊடகங்களில் பேட்டி அளித்து வரும் அவர், மீடியாவுக்கு வந்த புதிதில் பட்ட கஷ்டங்களையும் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்ததையும் கூறி வருகிறார். அதேபோல் தனது கடன்கள் அனைத்தையும் தீர்த்து வைத்தது முகருப்பரு தான் என சுவாரசியமான தகவலை கூறியிருக்கிறார்.
அதாவது, விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த தீபிகாவிற்கு முகப்பருக்கள் அதிகம் இருந்ததால் சீரியலிலிருந்து வெளியேறினார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் தீபிகாவிற்கு சோஷியல் மீடியாவில் தங்களது தீவிரமான ஆதரவை கொடுத்தார்கள். இதனால் யு-டியூபில் தீபிகா வெளியிடும் வீடியோக்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதன் மூலம் கிடைத்த வருமானம் மூலம் தீபிகா தனது கடன்கள் அனைத்தையும் அடைத்துவிட்டாராம். கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல் சீரியலிலிருந்து வெளியேறிய தீபிகா ரசிகர்களிடம் அதிக புகழ் பெற்று இன்று அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறார்.