பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
நாதஸ்வரம் சீரியலில் பாண்டி கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகர் பாண்டி கமல். அதன்பின் பல தொடர்களில் இவர் நடித்திருந்தாலும் நாதஸ்வரம் சீரியல் தான் இவருக்கான அங்கீகாரத்தை கொடுத்தது. பாண்டி கமல் தற்போது பூவா தலையா தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் தன்னை அறிமுகப்படுத்திய திருமுருகன் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
பாண்டி கமல் பேசியபோது, ‛‛நாதஸ்வரம் சீரியல் மூலமாகத்தான் நான் இன்று நல்ல நிலையில் இருக்கிறேன். என்னுடைய மகள் பிறந்தநாள் விழாவுக்கு திருமுருகன் சாரை அழைக்க சென்றிருந்தேன். ஆனால், அவர் ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் பிசியாக இருந்தார். அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று மேனேஜரிடம் மட்டும் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ஆனால், என் மகள் பிறந்தநாள் விழாவுக்கு அழைக்காமலேயே திருமுருகன் சார் முதல் ஆளாக வந்து தங்க கம்மலை பரிசாக கொடுத்தார்'' என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.