இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலமான ஜூலிக்கு தற்போது 42 வயதாகிறது. இவர் தற்போது நிறைமாத கர்ப்பமாக உள்ள நிலையில், குழந்தை பிறப்பை தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கும் தம்பதிகளுக்கு அட்வைஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அண்மையில் கணவனும் மனைவியுமாக அளித்த பேட்டியில், 'எங்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 முறை அபார்ஷன் ஆகிவிட்டது. மூன்றாவது முறை கர்ப்பமாக இருக்கிறேன். இந்த குழந்தை கன்பார்ம் ஆகும் வரை இருவரும் பயந்து கொண்டிருந்தோம். ரிசல்ட் பாசிட்டாவாக வந்த உடன் மருத்துவமனையிலேயே அழுதுவிட்டேன். எங்களுக்கு இப்போது ட்ரீமெண்ட் மூலம் தான் குழந்தை பிறக்க போகிறது. எல்லோருக்கும் நான் சொல்லும் அட்வைஸ் ஒன்று தான். வேலை எப்போது வேண்டுமானால் கிடைக்கும். அதற்காக குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள்' என்று கூறியுள்ளார்.