விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களிலேயே சிறகடிக்க ஆசை தொடருக்கு தான் ரசிகர்களின் பேராதரவு கிடைத்து வருகிறது. அதிலும் இந்த தொடரில் நாயகனாக நடித்து வரும் வெற்றி வசந்த் தனது எதார்த்தமான நடிப்பால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இதன்மூலம் இவருக்கு மற்ற சீரியல்களிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. முன்னதாக பொன்னி என்கிற தொடரில் என்ட்ரி கெஸ்ட் ரோலில் என்ட்ரி கொடுத்த வெற்றி வசந்த், தற்போது விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் நீ நான் காதல் என்கிற தொடரிலும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இதற்கான புரோமோ அண்மையில் வெளியாகி வைரலாக வெற்றி வசந்த்துக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.