மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் |
சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார் சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட். குக் வித் கோமாளி சீசன் 5 விரைவில் துவங்க உள்ள நிலையில அதில் தான் இடம்பெறவில்லை என்பதை பகிரங்கமாக அறிவித்த அவர், இதை விட புதிய பரிணாமத்தில் பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், அவர் புதிதாக பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக டப்பிங் பேசும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் தற்போது பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் சிங்கம் சிங்கிளா தான் வரும். நீங்க சொல்லிட்டீங்க நாங்க ஆரம்பிக்கிறோம் என்று பதிவிட்டிருக்கிறார். இதனையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ரசிகர்கள் வெங்கடேஷ் பட்டை மிஸ் செய்வதாக புலம்பி வருகின்றனர். மேலும், அவர் இணைந்துள்ள புதிய நிகழ்ச்சிகள் குறித்த தகவலையும் ஆவலுடன் கேட்டு வருகின்றனர்.