ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தனியார் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த கோலங்கள் தொடரில் வில்லனாக நடித்து பிரபலமானார் அஜய் கபூர். சினிமாவில் தீவிரமாக வாய்ப்பு தேடி அலைந்த அவருக்கு கோலங்கள் தொடர் நல்ல ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது. இந்நிலையில், அவர் அண்மையில் கோலங்கள் சீரியலில் நடித்ததால் அயன் பட வாய்ப்பை இழந்ததாக கூறியுள்ளார்.
அவரது பேட்டியில், 'அயன் படத்தில் கமலேஷ் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் என்னை தான் கேட்டிருந்தார்கள். ஆனால், கோலங்கள் சீரியலில் பிசியாக இருந்ததால் நடிக்க முடியவில்லை. இருந்தாலும், அந்த படத்தில் என்னை டப்பிங் பேச வைத்தார்கள். ஒரே நாளில் மொத்த டப்பிங் முடித்துவிட்டேன். அந்த படம் சூப்பர் ஹிட்டானது, இயக்குநர் பாராட்டினார். அந்த கதாபாத்திரத்திற்கே என் குரல் தான் உயிர்கொடுத்தது என்று சொன்னார். அந்த படத்தை என்னால் மறக்கவே முடியாது' என்று அதில் கூறியுள்ளார்.