காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். திரைப்படங்களில் தீவிர வாய்ப்பு தேடிவரும் அவர், தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மணமேடையில் மாப்பிள்ளையாக இருப்பது போன்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இதனையடுத்து ரசிகர்கள் பாலாஜிக்கு திடீர் திருமணமா? என அதிர்ச்சியடைந்தனர். அதேசமயம் மணப்பெண்ணின் முகம் சரிவர தெரியாத அளவுக்கு க்ராப் செய்து வெளியிட்டிருந்தார். இதனால் சந்தேகமடைந்த சிலர் ஏப்ரல் 1 என்பதால் தன் நண்பர்களையும் ரசிகர்களையும் ஏமாற்ற ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படத்தை இப்படி வெளியிட்டுள்ளார் என கூறி வந்தனர். அதன்பின் சில மணி நேரங்களிலேயே இது போன மாதம் நடந்தது என இன்னொரு வீடியோவையும் வெளியிட்டு சஸ்பென்ஸை முடித்து வைத்துள்ளார். மணப்பெண்னாக அருகில் இருந்தவர் ஐஸ்வர்யா மேனன் . இருவரும் விளம்பர படத்திற்காக நடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் பாலாஜி முருகதாஸ் முட்டாள்கள் தினத்திற்காக பதிவிட்டுள்ளார்.