லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் பல ஹிட் நிகழ்ச்சிகளை மீடியா மேசன்ஸ் என்கிற நிறுவனம் தான் தயாரித்து வந்தது. இந்த நிறுவனம் சார்பில் வெளியான நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை ஆகிய நிகழ்ச்சிகள் குறிப்பிடத்தக்கவை.
இந்நிலையில், மீடியா மேசன்ஸ் நிறுவனம் தற்போது விஜய் டிவியை விட்டு விலகியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், 'கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறோம். விஜய் டிவியில் மட்டும் தான் நாங்கள் பணி புரிந்தோம். இது எங்களுடைய இரண்டாவது வீடு. ஆனால், இப்போது விஜய் டிவியிலிருந்து ஓய்வெடுக்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது' என அதில் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குக் வித் கோமாளி இயக்குநர் பார்த்திபனும் விஜய் டிவிக்கு குட் பை சொல்லியிருக்கிறார். இவ்வாறாக விஜய் டிவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பு நிறுவனம் தனது கலைஞர் பட்டாளத்துடன் விஜய் டிவியை விட்டு வெளியேறியுள்ளது. இது விஜய் டிவிக்கு பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.