ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் நடிகை மதுமிதா. இவர் அண்மையில் தனது ஆண் நண்பருடன் பயணித்துக் கொண்டிருந்த போது ஒன்வேயில் சென்று விபத்தை ஏற்படுத்தினார். இதில் காவலர் ஒருவர் காயமடைந்ததாகவும் இதனைதொடர்ந்து மதுமிதா குடித்து விட்டு காரை ஓட்டியதால் அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், தற்போது அந்த விபத்து குறித்து விளக்கமளித்துள்ள மதுமிதா, ‛‛நான் குடித்துவிட்டு காரை ஓட்டியதாக சில ஊடகங்களில் தவறாக செய்திகள் வருகிறது. ஆனால், அது உண்மையல்ல. விபத்து நடந்தது உண்மை. அதில் அந்த காவலருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. அவர் தற்போது நலமாக இருக்கிறார். வதந்திகளை நம்பாதீர்'' என வேண்டுகோள் வைத்துள்ளார்.