பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் | பிளாஷ்பேக்: வண்ணத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட சக்ர தாரி | 'தனுஷ் 55' படத்தின் கதை பற்றி அப்டேட் தந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி | அசத்துமா 'அஅ - அ' கூட்டணி? வெளியானது அறிவிப்பு | தமிழில் மற்ற மொழி நிறுவனங்களின் ஆதிக்கம் | வீட்டில் அமைதியாக பிறந்தநாளைக் கொண்டாடிய அல்லு அர்ஜுன் | தீபாவளி தினத்தில் சூர்யாவும், கார்த்தியும் நேரடியாக மோதிக் கொள்கிறார்களா? | 'விடாமுயற்சி'யை விட 'குட் பேட் அக்லி' குறைவான டிக்கெட் புக்கிங்! | நளினியுடன் இணைந்தது உண்மையா? நடிகர் ராமராஜன் விளக்கம் | குட் பேட் அக்லி - அனைத்து 'அக்லி' வார்த்தைகளையும் 'கட்' செய்த சென்சார் |
சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி தான் நடிக்கும் கதாபாத்திரங்களில் அர்ப்பணிப்புடன் நடித்து தமிழ் சின்னத்திரையுலகில் முன்னணி நடிகையாக இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடித்த சைத்ரா, கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக கயிற்றில் தொங்கி ரிஸ்க்கான சண்டை காட்சியில் நடித்திருந்தார். இந்நிலையில் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் அவர், ஒரு விபத்து காட்சிக்காக ரிஸ்க்கான ஸ்டன்ட் சீனில் நடித்துள்ளார். அந்த வீடியோவானது தற்போது வெளியாகி வைரலாகி வரும் நிலையில் சைத்ராவின் அர்ப்பணிப்பான நடிப்பை ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.