ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
கலர்ஸ் தமிழ் சேனலானது முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளுக்கு இணையாக புதிய தொடர்களை தயாரித்து வருகிறது. தவிரவும் ஹிந்தியில் ஹிட்டான சில சூப்பர் ஹிட் தொடர்களையும் மொழி பெயர்த்து வருகிறது. முன்னதாக 'சங்கடம் தீர்க்கும் சனி பகவான்', 'நாகினி' ஆகிய தொடர்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது 'பிசாசினி' என்கிற புதிய அமானுஷ்ய திகில் தொடரை மொழிபெயர்த்து ஒளிபரப்ப உள்ளது.
தமிழ் சீரியல்களில் திகில், பேய் போன்ற சீரியல்களின் வரத்து குறைந்து விட்டதால், இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதன் புரோமோ அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.