ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி தான் எடுத்துக் கொண்ட கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்து பாராட்டுகளை பெற்று வருகிறார். அதற்காக எந்த ரிஸ்கையும் எடுக்கத் தயராக இருக்கும் சைத்ரா, முன்னதாக யாரடி நீ மோகினி தொடரிலும் பேயுடன் சண்டையிடும் காட்சிக்காக கயிற்றில் தொங்கிய படி ரிஸ்க்கான சண்டை காட்சியை சைத்ரா செய்திருந்தார். தற்போது கயல் தொடரின் காட்சிக்காக உண்மையாகவே சைத்ரா ரெட்டி நாள் முழுவதும் கழுத்தில் சுருக்கு கயிறுடன் ஐஸ்கட்டி மீது நின்று நடித்துக் கொடுத்துள்ளார். 2 நிமிடம் ஐஸ்கட்டி தொடர்ந்து கையில் பட்டாலே நம்மில் பலரால் தாங்க முடியாது. ரத்த ஓட்டம் நின்றுவிடும். ஆனால், ஷூட்டிங்கிறாக தொடர்ந்து ஐஸ்கட்டி மேல் நின்று சைத்ரா ரிஸ்க் எடுத்துள்ளார். இந்த காட்சியின் மேக்கிங் வீடியோவானது தற்போது வைரலாகி வரும் நிலையில் பலரும் நடிப்பின் மீதான சைத்ராவின் அர்ப்பணிப்பை பாராட்டி வருகின்றனர்.