நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரை நடிகை மீனா வெமூரி. பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவே 2, இலக்கியா ஆகிய தொடர்களில் ஹீரோயின்களுக்கு அத்தையாக பல கொடுமைகளை செய்து நேயர்களிடம் திட்டையும் வாங்கி வருகிறார். அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், 'சீரியல் மூலம் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால், நிறைய பேர் என்னை திட்டுகிறார்கள். காரணம் என்னுடைய கதாபாத்திரம் தான். மீடியாவிற்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை யாரும் என்னிடம் அட்ஜெஸ்மெண்ட் கேட்டதில்லை. போனில் மட்டும் சில அழைப்புகள் வரும். அவர்கள் ஆரம்பிக்கும் போதே நான் முடியாது என்று சொல்லிவிடுவேன். ஆனால், காலை 7 மணிக்கு ஷூட்டிங் சென்றால் இரவு வரை உட்கார வைத்து 8 மணிக்கு ஒரு ஷாட் எடுப்பார்கள். அப்போதும் அனுப்பமாட்டார்கள். இரவு 9 மணிக்கு தான் அனுப்புவார்கள். அது ஒன்று தான் கஷ்டமாக இருக்கும். அவர்களை குற்றம் சொல்ல முடியாது. எப்போது ஷூட்டிங் முடியும் என்று அவர்களுக்கே தெரியாது. ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், ஷூட்டிங் போக போக பழகிவிட்டது' என்று கூறியுள்ளார்.