நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 4 அண்மையில் முடிவடைந்தது. இதில், கோமாளியாக நுழைந்து அசத்தியவர் மோனிஷா. அதிலும், ஒரு எபிசோடில் சிவாங்கியை அப்படியே இமிட்டேட் செய்து, அவரை போலவே மிமிக்ரியும் செய்து அசத்தினார். இதன் மூலம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. தொடர்ந்து திரைப்பட வாய்ப்பு கிடைத்து, மாவீரன் திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்துள்ளார்.
என்னதான் நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் யுனிவர்சிட்டியில் எம்.எஸ்.சி எலக்ட்ரானிக் படிப்பு முடித்துள்ள மோனிஷா யுனிவர்சிட்டி அளவில் முதல் ரேங்க் பெற்றிருக்கிறார். இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கையால் அவருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதன் புகைப்படங்களை தனது சோஷியல் மீடியாவில் மோனிஷா பெருமையுடன் பகிர்ந்துள்ளார். நடிப்பில் மட்டுமில்லாது படிப்பிலும் டாப் இடத்தை பிடித்திருக்கும் மோனிஷாவின் திறமையை தற்போது பலரும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.